நாட்டு மாட்டுப் பாலும் நம் உடல் நலனும்

This article is based on a Mother's personal experience 

  

  • 1) குழந்தைகளுக்குப் பால்தான் முதன்மை உணவு என்று உறுதியாக நம்பி இருந்த எனக்கு அதுதான் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் கோளாறுகளுக்கான முக்கிய காரணி என்று உணர வைத்தது எனது இரண்டு சொந்த அனுபவங்கள். எங்கள் முதல் குழந்தைக்கு நாட்டு மாட்டுப் பால் எளிதாக கிடைத்தது எனவே கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நட்டு மாட்டுப் பால் மட்டுமே கொடுத்து வந்தோம். 
  • 2) எப்போதாவது ஒரு முறை வரும் சளியைத் தவிர வேறு எந்த உடல் கோளாறும் வந்ததில்லை, மருத்துவமனை செல்லும் அவசியமும் ஏற்ப்பட்டதில்லை.  ஆனால் எங்கள் இரண்டாவது குழந்தைக்கு நாட்டு மாட்டுப் பால் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் பாக்கெட் பால் கொடுக்கத் துவங்கினோம்..... 
  • 3) இருவரும் பாக்கெட் பால் குடிக்க துவங்கிய சில நாட்களில் தொடர்ந்து, சளி, இருமல் வரத் துவங்கியது.  முதலில் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  வீட்டு வைத்தியமாக மிளகு, மஞ்சள் என அனைத்தையும் பாலில் கலந்து கொடுத்துப் பார்த்தோம்.  ஆனால் சளி, இருமல் அதிகம் ஆகியதே தவிர குறையும் படியாக இல்லை. 
  • 4) தொடர்ச்சியான சளி, இருமல் ஆகியவை குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கத் துவங்கியது, உணவு உண்ணுதல் குறைந்தது. பிறகு அலோபதி, சித்தா, ஹோமியோபதி என எல்லா மருந்துகளும் முயற்சித்தும் பலன் இல்லை. பிறகு ஒரு சித்த மருத்துவர் பாலை நிறுத்தி பாருங்கள் என்று கூறினார்.  
  • 5) முதலில் அது எனக்கு முட்டாள்த்தனமாகத்தான் தோன்றியது. குழந்தைக்கு பாலை நிறுத்தினால் எப்படி என்று, ஆனால் வேறு எந்த வழியும் புலப்பாடாததால் இறுதியில் அதனையும் முயற்சி செய்தோம். பாலினை நிறுத்திய அடுத்த இரண்டு நாட்களில் இருமல் குறைந்தது, சளியும் படிப் படியாக குறையத் துவங்கியது. அதன் பின் மிகவும் சிரமப்பட்டு நட்டு மாட்டுப் பால் வாங்கி கொடுக்க ஆரம்பித்தோம். இப்பொழுது சுத்தமாக சளி, இருமல் சிக்கல் இல்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் அலுவல் விடயமாக சென்னை சென்ற பொழுது ஒரே ஒரு நாள் இரண்டாவது குழந்தைக்கு சிந்து மாட்டுப் பால் கொடுத்தோம். 

 

 

 

                no-to-jersey-milk

 

 

 

 

  •  6) அடுத்த நாளில் இருந்து வாந்தியும், வயிற்றோட்டமும் துவங்கியது. மருத்துவரிடம் சென்றால் உடனே பாலை நிறுத்துங்கள், இது போல் அதிகப்படியான குழந்தைகள் வருகிறார்கள் என்கிறார்.இரண்டுநாள் மருத்துவமனையில் இருந்து பிறகு தான் வீடு வந்து சேர்ந்தோம். எனவே வேறு வழியில்லாத சந்தர்ப்பங்களில் ஓரிரு நாட்கள்  பவுடர் பால் கொடுப்பது கூட பரவா இல்லை. பவுடர் பால் தொடர்ச்சியாக கொடுப்பது கூடாது என்றாலும் தவிர்க்க முடியாத சூழலில் சிந்து/ஜெர்சி மாட்டுப்பால் கொடுப்பதற்கு பதிலாக பவுடர் பால் கொடுப்பதே நலம்.
  • 7) இத்தனை அனுபவங்களின் பிறகு இப்பொழுது பெரியவன் வளர்ந்து விட்டதால் அவனுக்கு முற்றிலுமாக பாலை நிறுத்தி விட்டு அனைத்து சத்துக்கள் நிறைந்த நம்ம ஊர் கடலை மிட்டாய்எள்ளு மிட்டாய்தேங்கா மிட்டாய்,அத்திப்பழம் ஆகியவற்றை தொடர்ந்து கொடுத்து வருகிறோம். இப்பொழுது குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள். இரண்டாவது குழந்தை இன்னும் இவைகளை உட்கொள்ளும் அளவுக்கு வளராததால் அதிக செலவு செய்து இரண்டாவது குழந்தைக்கு மட்டும் நாட்டுப் மாட்டுப் பால் வாங்கித் தருகிறோம்.நீங்களும் பாலினைத் தொடர்ந்து உட்கொள்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. ...   
  • 8) அங்கு, இங்கு என ஓடி பெற்ற அனுபவத்தின் வாயிலாக கடைசியில் நம்ம ஊர் பாலும், நம்ம ஊர் பண்டங்களுமே சிறந்தது என்று உணர வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். மீண்டும் நமது அடிப்படைக்குத் திரும்புவோம். நம்ம ஊர் பாரம்பரிய  தரம்  குறையாத பண்டங்கள்  https://nativespecial.com   இணையத்தில். Quality Guaranteed !

 

                       Order Now :  கடலை மிட்டாய், : http://bit.ly/2qDXzVP

                     Order Now : எள்ளு  மிட்டாய்   :  http://bit.ly/2qEmywB

 
Free Shipping & Two Days Home Delivery 

 


0 Comment


Leave a Comment