தமிழர்களின் கைமருந்து நெல்லிகாய் சாறு (nellikai juice/amla juice benefits) :-
இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர்.அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100 க்கும் அதிகமாக இருந்தது.இன்றைய சூழ்நிலையில் மனிதன் நவீனம் என்ற பெயரில் உடல்பருமன்,சிறுவயதிலே கண் குறைப்பாடு ,இளநரை,சொத்தைப்பல்,நீரிழிவு நோய் என நோய்களை விலைகொடுத்து வாங்கிவிட்டான். இன்று ஒருவர் 100 வயதை அடைந்தாலே விழா கொண்டாடும் அவலம் நம்மிடையே வந்துவிட்டது.காரணம் ,நமது ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு தீய கொழுப்புகளை மட்டும் சேர்த்து உடலினை பராமரிக்க மறந்துவிட்டோம் .
நம் முன்னோர்கள் உணவை மருந்தாக பயன்படுத்தினர் .ஆனால் நாம் மருந்தைத்தான் உணவாக பயன்படுத்துகிறோம் .இந்த நிலையை முழுமையாக மாற்ற தற்போது இயலவில்லை என்றாலும் அதற்கான முயற்சியை செய்தால் தான் நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக அமையும்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?
நாம் மறந்து போன ,மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களை ,உணவுகளை மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் .அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று "நெல்லிக்காய்"
நெல்லிக்காய்க்கும் ,தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பலவழிகளில் அறியலாம்.ஆயுர்வேத சாஸ்திரம் முதல் சங்ககால செய்யுள்கள் வரையிலும் நெல்லிக்காயை பற்றி சொல்லாத இடங்களே இல்லை.அந்த அளவிற்கு நெல்லிக்காயின் பயன்கள் அளவில்லாதது.
நெல்லிக்காய் பற்றி:-
தினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும்.நெல்லிக்காயை சாறாக உண்ணும் போது திரவடிவில் செல்வதால் இன்னும் வேகமாக உடலில் சேருகிறது.நெல்லிக்காயை விட சாறுக்கு வேகம் அதிகம்
நெல்லிச்சாறின் பயன்கள்(nellikai Juice/amla juice benefits):-
இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.
இதை ஜூஸ் செய்து வைத்துக்கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நெல்லி ஜூஸ் (nellikai juice / amla juice) தினமும் பயன்படுத்தினால் சிறிது காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். நன்றி!!
Now readily available/ Buy Now @ https://www.nativespecial.com/product/nelli-charu-online
Subscribe to get Email Updates!
Thanks for subscribe.
Your response has been recorded.
Customer Care:
Bulk Orders & Business Inquiries: +918098619006
UAE Inquiries: +0507498768
Nativespecial
2 Comments
Leave a Reply
Leave a Reply